Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் நிறைய கிடைக்கும்… ஒரே இடத்தில் 5 எலும்புக்கூடுகள்… தொல்லியல் துறையினரின் கண்டெடுப்பு…!!

அகழாய்வு பணியில் 5 மனித எலும்புக்கூடு கிடைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் மூலம் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. தற்போது கீழடியில்  7 – ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் அகழாய்வு பணிகள் கீழடியில் மட்டுமின்றி அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொந்தகை பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் மனித எலும்புக்கூடுகளை கண்டறிந்தனர்.

அதன்பின் அதே இடத்தில் தொடர்ந்து அகழாய்வு பணிகள்  நடைபெற்றது. இதனைதொடர்ந்து அந்த ஆய்வில் 5 முழு  எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது. இந்த எலும்பு கூடுகளை தொல்லியல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தொல்லியல் துறையினர் கூறுவதாவது, இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் உடற்கூறு ஆய்வுக்கு சென்று வந்த பிறகு தான் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர்களுடையது என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார். மேலும் கொந்தகையில் நடத்தப்பட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |