கிட்டத்தட்ட 10,000 அகதிகள் ரியோ கிராண்டி என்னும் ஆற்றை கடந்து அமெரிக்காவிற்குள் நுழைந்து அந்நாட்டிலுள்ள நெடுஞ்சாலை பாலம் ஒன்றுக்கு கீழே தஞ்சமடைந்துள்ளார்கள்.
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாவட்டத்தில் டெல் ரியோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் தென் அமெரிக்காவிலிருந்து ரியோ கிராண்டி என்னும் ஆற்றைக் கடந்து சுமார் 10,000 அகதிகள் இந்த டெல் ரியோ என்னும் நகரத்திலுள்ள பாலம் ஒன்றிற்கு அடியில் குவிந்துள்ளார்கள்.
இதனையடுத்து பாலத்திற்கு அடியே குவிந்த அகதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அந்நகரத்தின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளார்கள்.
இதனைதொடர்ந்து ரியோ கிராண்டி என்னும் ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த சுமார் 10,000 அகதிகள் சிலநாட்களுக்கு பின்பாக அகதிகள் தங்கும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.