Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்களின் குறைகளை கேட்டறிந்து…. நடவடிக்கை எடுப்பதற்கு…. அமைச்சரின் உத்தரவு….!!

மெல்மொணவூர் இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மெல்மொணரில் இலங்கை அகதிகள் முகாமில் 311 குடும்பத்தைச் சேர்ந்த 992 நபர்கள் வசித்து வருகின்றனர். அங்கு நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்து மக்களிடம் அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பொது கழிப்பறை கட்டி தரவேண்டும் என்றும் இந்தியாவில் தொடர்ந்து வசிக்க விரும்புபவர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்று தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்பின் நாடு திரும்புபவர்களுக்கு கப்பல் வசதி செய்து கொடுத்தல், விதவை மற்றும் முதியோர் உதவி தொகை என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை நலன்துறை அமைச்சரிடம் மக்கள் முன் வைத்தனர். இவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பேபி இந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நரசிம்மன், தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |