அகதிகளாக புலம்பெயர்ந்த பெண்களிடம் அவர்களின் நிலைமை குறித்து தனியார் அமைப்பு ஓன்று பேட்டி எடுத்த அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
நைஜீரியா, சோமாலியா மற்றும் சிரியா போன்ற நாடுகளிலிருந்து 14 முதல் 50 வயதுக்குட்பட்ட 53 பேர் அகதிகளாக புலம்பெயர்ந்த்துள்ளனர். இதில் பாதி பேர் லிபியா முகாமில் இருந்து தப்பித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நேர்காணல் ஒன்றை அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து பிடிப்பட்டு லிபியாவிற்கு குடியேறியவர்களை முக்கியமாக குறிக்கிறது. இந்த அறிக்கையில் அவர்கள் கூறியதாவது “ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் லிபியா கடலோர காவல் படையினர் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 15000 பேரை கடலில் தடுத்து லிபியாவிற்கு திரும்பியுள்ளனர். இதனைஅடுத்து லிபியாவின் முகாம்கள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் அங்கு மோசமான நிலைமை நிலவுவதாக கூறுகின்றனர்.
மேலும் அங்குள்ள காவலர்கள் ஒருவேளை உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக தங்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திபப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களை காவலர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் பெண்களைஅவமனப்படுதுவதற்காக அரைகுறை ஆடைகளுடன் நடமாட வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் 2017 முதல் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மற்றும் 6,500 பேர் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து புலம்பெயர்ந்தோர்களுக்கு “லிபியா ஒரு பாதுகாப்பான நாடு இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர். இதனை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சிலர் ஐரோப்பிய ஆணையர் நிர்வாகிகளிடம் கடலோர காவலர்களுக்கு நீதி அளிப்பதை நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர்.