Categories
தேசிய செய்திகள்

“வயது வித்தியாச திருமணம்” 51 வயது மனைவியை…. 28 வயது கணவரின் வெறிச்செயல்…!!

28 வயதான கணவர் ஒருவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் வசித்துவந்த காதல் ஜோடிகள் ஹஹாகுமாரி(51) – அருண்(28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இருப்பினும் 51 வயதான ஹஹாகுமாரிக்கும், 28 வயதான அருணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் முறைப்படி பதிவு செய்யாமல் இருப்பதை பற்றி ஹஹாகுமாரி அருணிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு இவர்களுடைய திருமண புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது. எனவே திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டது மற்றும் ஏற்கனவே வாக்குவாதம் உள்ளிட்டவற்றால் அருண் தன்னுடைய மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் இவர் ஏற்கனவே பலமுறை தன்னுடைய மனைவியை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சியில் இருந்து ஹஹாகுமாரி தப்பியிருக்கிறார்.

தன்னைக் கொல்ல முயற்சித்தது தன் கணவன் என்ற உண்மை அவருக்குத் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஹஹாகுமாரி வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, அருணிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |