முக.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவள்ளுவருக்குப் பதிலாக தந்தை பெரியார் என பிள்ளையார்பட்டியில் கூறினாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்க்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மு.க.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்றார்.
மேலும் பதற்றத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்கு சென்றிருந்தபோது மணமகன் பெயருக்குப் பதிலாக மாமனார் பெயரைக் கூறினார்.இவ்வாறு பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அதனைக் குறை கூறவேண்டியது இல்லை. அது உடல் ரிதீயான பிரச்னையாக கருத வேண்டும். வயது முதிர்வின் காரணமாக அனைவருக்கும் மறதி இருக்கத்தான் செய்யும். அது ஒரு தவறு கிடையாது என்று அமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் என்று கூட பாராமல் அசிக்கப்படுத்தினார்.