Categories
அரசியல்

பா.ஜ.க வில் யார் நின்னாலும் தோக்கப்போறது நிச்சயம்… அகிலேஷ் யாதவ் பேட்டி…!!!

உத்திரப்பிரதேசத்தில் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கர்ஹாலை எதிர்த்து பாஜகவின் சார்பாக மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் களமிறங்கியிருக்கிறார்.

ஆக்ரா தொகுதியினுடைய பா.ஜ.க கட்சியின் எம்.பி யான பாகெல் தேர்தலில் களம் இறங்குவதாக அறிவிப்பு வெளியானதால், கர்ஹால் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கிறது. அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்த போது பேசியதாவது, கர்ஹால் தொகுதியில் பாஜக சார்பில் யார் தேர்தலில் நின்றாலும் அவர்கள் தோற்பது உறுதியாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவ் தேர்தலில் களமிறங்கிய போது, அவரை எதிர்த்து நின்ற பாகெல் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |