Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காததால் வேதனை…. விவசாயி தற்கொலை முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

நில ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கொரக்கத்தண்டலம் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவர் எறையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக தனபால் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனபாலின் நிலத்தில் அவரது உறவினர் ஒருவர் எனக்கும் இந்த நிலத்தில் உரிமை உண்டு எனக்கூறி நெற்பயிரை டிராக்டர் கொண்டு சேதப்படுத்தி ஆக்கிரமித்துள்ளார். மேலும் தனபால் பல  முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனபால் மற்றும் ஆறுமுகத்தை திருவள்ளூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Categories

Tech |