பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குருவை பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் , மானாமதுரை, எஸ் புதூர் , இளையான்குடி, சிங்கம்புனரி உள்ளிட்ட பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் உளுந்து, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 450 செலுத்தி வருகின்ற ஜூன் 15ம் தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்யுமாறும், அன்றே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 31-ஆம் தேதிக்குள் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 331 மற்றும் ரூபாய் 416 பதிவு பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.