Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை…. தூக்கி குப்பையில் போடுங்கள் – ராகுல் ஆவேசம்…!!

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பையில் போடுங்கள் என்று ராகுல் ஆவேசமாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும் குப்பையில் தூக்கி போடுங்கள்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Categories

Tech |