Categories
மாநில செய்திகள்

“விவசாய கடன் தள்ளுபடி… முதல்வரின் அதிரடி அறிவிப்பு”…. குஷியில் விவசாயிகள்..!!

விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

16.43 லட்சம் விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொடர் மழை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் தமிழகத்தில் பல்வேறு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

அவர்களுக்கு உதவும் வகையில் 16.49 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கியின் மூலமாக பெற்ற 12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த அரசாணை விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த  அறிவிப்புக்கு  சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பளித்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியானதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |