நடிகை கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
அந்த வகையில் தமிழ் நடிகையான கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் இறங்கியுள்ளார். நடிகர் அருண்பாண்டியன் மகளான இவர் தற்போது ஹெலன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வரும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது செயலுக்கு பல தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.