Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எந்த கவலையும் இல்லை… ஊரடங்கு காலத்திலும் கிடைக்க ஏற்பாடு… அதிகாரி கூறிய தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் அனைத்தும் எந்த வித தடையுமின்றி கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் தோராயமாக 10 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் நெல் பயிர் விதைகள் மற்றும் உரம் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் ஊரடங்கு காலத்திலும் எந்தவித தடையுமின்றி கிடைப்பதற்கு அப்பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், தனியார் விற்பனை மையங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் விற்பனை நடைபெறும் என கூறியுள்ளார்.

Categories

Tech |