நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். இதனை அடுத்து சுருல் பூச்சி என்பது புழு வகையை சேர்ந்தது. இது முதலில் இலைகளை துளையிட்டு, பின் நடுநரம்புகளில் சில நாட்கள் வாழும். அதன்பிறகு இந்த சுருள் பூச்சி பெரிதடைந்து பச்சையத்தை சுரண்டி சேதப்படுத்தும்.
இதனின் தீவிர தாக்குதல் என்னவென்றால், நன்றாக இருந்த செடிகள் காய்ந்து சுருங்கி இருக்கும் மற்றும் தூரத்திலிருந்து செடிகளை பார்த்தால் எறிந்தது போல் காட்சியளிக்கும். இதனை அடுத்து நிலக்கடலை உடன் உளுந்து மற்றும் தட்டைப்பயிறை 1:4 என்னும் விகிதத்தில் பயிரிடலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட துணை வேளாண்மை இயக்குனர் சிவக்குமார் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.