Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயம் அரசு பணியாக மாற்றப்படும் – நாதக அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதிப் பங்கீட்டில் குழப்பமும் நீடித்து வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அதில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் சென்னை YMCA மைதானத்தில் அறிமுகம் செய்து வைத்தார் சீமான்.

இந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசுகையில், ” படித்தவர்களுக்கும் விவசாயம் வேண்டும். 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு கண்டிப்பாக ஓய்வுதியம் வழங்கப்படும். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மை அரசு பணியாக மாற்றப்படும். தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை வழங்குவோம். பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் “என்று கூறியுள்ளார்.

Categories

Tech |