100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் திருப்புகலூர் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்த அனைவருக்கும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 273 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
மேலும் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ள 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஊதியத்தை வரவு வைக்கவேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பொன்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் லெனின் போன்ற பலர் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.