பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரம் மற்றும் உணவை தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் Agrivoltaics என்ற நடைமுறை தொடங்கியிருக்கிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரத்தையும் உணவையும் தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். Agrivoltaics என்ற அந்த முறையானது நிலத்தில் ஒரே சமயத்தில் சூரிய ஆற்றலில் மின்சாரம் தயாரிப்பது மற்றும் விவசாயம் செய்வதாகும். அதன்படி பயிர்கள் வெயிலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
மேலும், சோலார் தகடுகள் மூலமாக சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து தயாரிக்க விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் மின்சாரம் தயாரிக்கக்கூடிய சமயத்தில் விவசாயமும் தடையில்லாமல் நடப்பதற்கு இந்த முறை பயன்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.