Categories
சினிமா தமிழ் சினிமா

அட… ஒரே நாள்ல ரெண்டு பேருக்கும் விருதா…. ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

ரஜினி மற்றும் தனுஷ் ஒரே நாளில் விருது வாங்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் மருமகனும், முன்னணி நடிகருமான தனுஷிற்கு அசுரன் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 67 வது தேசிய விருது வழங்கும் விழா வரும் மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆகையால் அன்றைய தினமே நடிகர் ரஜினிகாந்திற்க்கும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாதா சாகேப் பால்கே விருதை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெறுவது அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |