சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் விக்ரமன். இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் நடித்தவர் என்பது தெரிந்த விஷயம்.
இந்நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ”EMI தவணை முறை வாழ்க்கை” என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் இந்த சீரியல் சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.