தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி ரஜினி பற்றி பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
அவர் பேட்டியில் கூறியதாவது, அருணாச்சலம் படத்தை முதலில் பி. வாசு இயக்குவதாக இருந்தது. அந்தப் படத்தில் நான் தான் வில்லனாக நடிக்க இருந்தேன். அந்த சமயத்தில் ரஜினி ஒரு முறை என்னை வீட்டிற்கு அழைத்தார். நான் அங்கு சென்ற போது என்னிடம் சரக்கு அடிப்பீர்களா என்று கேட்டார். உடனே நானும் ஆமாம் என்று கூறினேன். அதன் பிறகு நானும் ரஜினியும் ஒன்றாக அமர்ந்து சரக்கு அடித்தோம்.
அப்போது திடீரென ரஜினி நான் அருணாச்சலம் படத்தை வேறு ஒருவரை வைத்து இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார். அதோடு 3 பேரை வில்லனாகவும் தேர்வு செய்து விட்டோம் என்றும், நீங்கள் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும் கூறினார். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ராதாரவி ரஜினி பற்றி கூறிய சம்பவம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.