Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா மாறி நானும் பேசி… இந்தியா முழுவதும் பரவிடுச்சு….ஒரே பதட்டமா இருந்துச்சு… திருமா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆ.ராசா அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார், நான் இப்படித்தான் ஒரு இணைய கூட்டத்தில்  பேசும்போது மேற்கோள் காட்டினேன், நான் ஒட்டுமொத்தமாக இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் இழிவுபடுத்தியதாக சனாதன கும்பல் மிகப்பெரிய சமூக பதற்றத்தை உருவாக்கினார்கள்.

இந்தியா முழுவதும் அதை கொண்டு போய் சேர்த்தார்கள். அதேபோல நானும் அவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பேற்று,  60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்ற நிலையில், திராவிட கழகத்தினுடைய தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை பாராட்டும் நிகழ்ச்சி தான் அந்த நிகழ்ச்சி.

இரண்டு பேரும் ஒரே கருத்தை பேசினோம், அவர் மனுதர்மத்தில் உள்ள செய்தியை எடுத்து மேற்கோள் காட்டி சொன்னார், இந்து என்று ஒத்துக் கொண்டால் சூத்திரன் என்று ஒத்துக் கொள்ள வேண்டும், சூத்திரன் என்றால் அதற்கு மனுதர்மம் என்ன பொருள் தருகிறதோ அந்த பொருளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே நான் இந்து இல்லை என்று ஏன் நீ சொல்லக்கூடாது என்று சூத்திரர்களாக இந்த சமூகம் அடையாள படுத்தப்படுபவர்களை பார்த்து சொன்னார்.

அது தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொருந்தாது அந்த கேள்வி.பிராமணர், சத்திரியர், வைஷியர் அவர்களுக்கு பொருந்தாது. இந்து சமூகத்தில் உள்ள நாலாம் வர்ணத்தை சார்ந்த சூத்திரர்களுக்கு அந்த கேள்வி எழுப்பப்படும், ஏனென்றால் மனுதர்மம் அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்லுகிறது. சூத்திரர் என்றால் வேசி பிள்ளைகள் என்று சொல்லுகிறது. இதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |