Categories
சினிமா தமிழ் சினிமா

அட… சூப்பர் ஸ்டார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Suriya met Mammootty .. Photo going viral on the internet | மம்முட்டியை  சந்தித்த சூர்யா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

 

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஜோதிகா பிறந்தநாளன்று வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு நடிகர் சூர்யா திடீர் விசிட் அடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |