Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆஹா.. நாக்கு ஊறுகிறது….. தீபாவளிக்கு தயாராகும் கேரட் மைசூர்பா….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பிரியர்களுக்காக ஸ்பெஷல் கேரட் மைசூர்பா விற்பனை செய்யப்பட இருப்பதாக ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனமாக செயல்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை விவசாய பால் உற்பத்தியாளர்களை முன்னேற்றும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சேலம் ஆவின் நிறுவனம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 715 பிரதான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 42 ஆயிரத்து 750 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 102 பால் கொள்முதல் வழிதடங்கள் மூலமாக தினசரி 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது .

Image result for கேரட் மைசூர்பா

உள்ளூர் மற்றும் சென்னை போன்ற பெருநகர விற்பனையையடுத்து மீதமுள்ள பாலில், தயிர், வெண்ணை, பால் பவுடர் , நெய், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் போன்ற பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்காக விநியோகிக்கப்பட்டுவருகிறது . இதன் மூலம் கிடைக்கும் வருவாயானது கிராமப்புறங்களில், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களில் பால் ஊற்றும் ஏழை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பாடு அடைய, அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது.

Image result for கேரட் மைசூர்பா

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் புதிய வகை இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணியில் ஆர்வம்காட்டி வருகிறது. பால்கோவா, ஆவின் நெய் லட்டு, முந்திரி கேக், மில்க் கேக், நெய் அல்வா, மைசூர்பா, ஸ்பெஷல் மைசூர்பா, ஸ்பெஷல் கேரட் மைசூர்பா, ஸ்பெஷல் மிக்சர், சோன்பப்டி போன்ற பல வகைகளில் சுவைமிகு தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 42 பால் உபபொருட்களுடன் சர்வதேச தரச் சான்றிதழ் பெற்ற சேலம் ஆவின் ஒன்றியம் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |