தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், பைக் ரைடு மற்றும் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் செய்தல் போன்றவைகளிலும் திறமை வாய்ந்தவர். அதோடு நடிகர் அஜித் பலருக்கும் உதவி செய்வார் என்றும் அடிக்கடி தகவல்கள் வெளிவரும்.
அந்த வகையில் நடிகை அம்பிகா பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் ஒரு குழந்தைக்கு உதவியதாக கூறியுள்ளார். அதாவது செய்தித்தாளில் ஒரு குழந்தைக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்ற செய்தியை நடிகர் அஜித் படித்துள்ளார். உடனே அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்கு ஆகும் மொத்த பணத்தையும் நடிகர் அஜித் மருத்துவமனையில் செலுத்தியுள்ளாராம். மேலும் சத்தமே இல்லாமல் நடிகர் அஜித் செய்த உதவியை அம்பிகா தற்போது பேட்டியில் சொன்னது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு நடிகர் அஜித்துக்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.