தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டு விஜய் சேதுபதியை பற்றி மிகவும் புகழ்ச்சியாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுநாள் டிஸ்ஜார்ஜ் ஆனார்.
அவர் டிஸ்டார்ஜ் ஆன பிறகு வீட்டில் ஓய்வெடுக்காமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமலுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரம்யா கிருஷ்ணன் அல்லது சிம்பு யாராவது ஒருவர் தான் நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசனே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இது பார்வையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கமல் ரசிகர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர். அதாவது உடல்நலம் சரியில்லாத நேரத்தில் வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள் என்று கமலுக்கு ரசிகர்கள் பலரும் அட்வைஸ் கூறி வருகிறார்கள். மேலும் கமல்ஹாசன் எச். வினோத் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.