அதிமுக தொடங்கி 50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய பெண்கள் எண்ணினார்கள்.. ஆஹா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வந்துட்டா மாதந்தோறும் ஆயிர ரூபாய் கிடைக்கும், 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கனவில் ஓட்ட போட்டாங்க, இப்போ திமுக அவங்களுக்கு வேட்டுவச்சிட்டாங்க.
இதுதான் நடந்தது. நம்முடைய இளைஞர்களை கவர வேண்டும், மாணவர்களே கவர வேண்டும் என்பதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கியிலே நம்முடைய மாணவச் செல்வங்கள் வாங்கிய கல்வி கடன் ரத்து இதுவரைக்கும் வாயவே திறக்கல. இப்பொழுது ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பரிசீலிப்பதாக… கணக்கெடுப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கல்வி கடனை பற்றி பேச்சும் கிடையாது, மூச்சும் கிடையாது.
இளைஞர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளார். முதியோர் உதவித் தொகை ஆயிரத்தில் இருந்து 1200 உயர்த்தவில்லை. நீங்கள் உயர்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை, அண்ணா திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை நிறுத்தாமல் இருந்தாலே பரவாயில்லை, அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.