Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா..! நல்ல பெயர் கிடைச்சுருமே … போற போக்குல பிடிச்சுக்கிட்டு போரானுவ… ஆதங்கத்தை கொட்டிய ஈபிஎஸ் ..!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆஹா..! இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்து விட்டார்களே, இதையெல்லாம் நாம் நிறைவேற்றினால் அவருக்கு தான் நல்ல பேர் போகும் என்று பொறாமை கொள்கின்ற திமுக அரசாங்கம், நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கம் திமுக அரசாங்கம்.

நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டத்தை அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்தது,  அதை நிறைவேற்ற நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று திமுக முதலமைச்சருக்கு சிறு துளி கூட எண்ணம் கிடையாது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. யாரும் சாலையில் நடமாட முடியவில்லை, பெண்கள் வாக்கிங் சென்றால் சங்கிலியை பிடிச்சுக்கிட்டு போயிருந்தான். போற போக்குல அப்படியே செயினை பிடிச்சுக்கிட்டு போயிருந்தான்.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி. இன்றைக்கு பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை இது தான் தொடர்ந்து நடக்கிறது.  நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன் 36 மணி நேரத்தில் 15 கொலை நடந்தது என்று, உடனே டிஜிபி 15 கொலை அல்ல 12 கொலை தான் என்கிறார். 36 மணி நேரத்தில் 12 கொலை நடக்கிறது என்றால் ?  எப்படிப்பட்ட அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டது, அடியோடு அழிந்துவிட்டது, சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாதாரண விஷயமா?

இன்றைக்கு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதே சட்ட ஒழுங்கு தான். ஒரு நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால், நாட்டினுடைய வளர்ச்சி சட்ட ஒழுங்கை பொருத்து தான் இருக்கிறது. எந்த ஒரு நாடு, எந்த ஒரு மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த மாநிலம் வளர்ச்சி அடையும், அந்த நாடும் வளர்ச்சி அடையும். ஆனால் இன்றைக்கு திமுக அரசாங்கம் ஏற்பட்டு எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறிதான், கொலை, கொள்ளை, திருட்டு  இதுதான் நடக்கிறது என விமர்சித்தார்.

Categories

Tech |