Categories
கிரிக்கெட் விளையாட்டு

அகமதாபாத்தில் நடைபெற்ற…இந்தியா- இங்கிலாந்து 20 ஓவர் போட்டி…வெற்றி பெறுமா இந்தியா …!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 20 ஓவர்க்கான போட்டி தொடரில் ,இந்திய அணி வெற்றி பெற  வேண்டும் என்ற ஆர்வத்துடன்  களமிறங்கியது .

அகமதாபாத்தில் நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்குகிடையே 5 வது  மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்கியது . இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த இரு அணிகளும் நடந்த  2  ஆட்டங்களில் ,சமமான வெற்றியை பெற்றுள்ளன. இந்தியா தனது 2 வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும்  மற்றும் 4வது போட்டியில் 8 ரன்களிலும் வெற்றி பெற்றது.

இதேபோன்று இங்கிலாந்து தன்னுடைய முதல் மற்றும் 3 வது போட்டிகள் , இரண்டிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி பெற்றது. எனவே இரு அணிகளும் வெற்றியை சமநிலையில் வைத்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் இந்தியா ,இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ,என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது இது உலக கோப்பை 20 தொடரின்  முன்னோட்டமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலின் ஆட்டமனது மோசமாக காணப்பட்டதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷோர் விளையாடுவார் என்று கருதுகின்றனர். இது தவிர இந்திய கேப்டன் விராட் கோலி , ஸ்ரேயாஷ் அய்யர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் நிலை நன்றாக உள்ளது. எதிரணியான மார்கன்  தலைமையில் உள்ள இங்கிலாந்து அணி தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ,சிறந்த பேட்ஸ்மேன் மற்றும்  சுழல்பந்து வீச்சாளர்களை  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த போட்டியானது  இரு அணிகளும் மோதிக் கொள்ளும் 19வது போட்டியாகும்.

Categories

Tech |