Categories
உலக செய்திகள்

ஆ..!.. இங்க அடி… ஆ…!.. அங்க அடி….!! கொரோனா_வால் வைரலாகும் வீடியோ …!!

கொரோனா கொடூர வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

மேலும் சீனாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை இந்தியா உட்பட பல நாடுகள் மீட்டு வந்த நிலையில் சீனாவில் இருந்து வரும் அனைவரையும் தீவிர கண்காணிப்பு , கொரானோ பாதிப்பு இருக்குமா என்று முழு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் தான் அவரவர்கள் நாட்டில் அனுமதிக்கின்றார்கள். இந்நிலையில் அணைத்து விமான நிலையத்திலும் முழு பரிசோதனை மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சீனாவில் இருந்து சவூதி விமானத்தில் வந்த இந்தோனிசியா பயணிகளுக்கு அந்த நாட்டின் மருத்துவ பரிசோதனைக்குழு கொரானோ வைரஸ் தாக்குதல் இருக்கின்றதா என்று சோதனை செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு , கைகளில் பெட்ரோல் பம்ப்_பை போல வைத்துக்கொண்டு பயணிகள் மீது அடிக்கப்படுகின்றது. இதில் ஏராளமானோர் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். ஒருவர் ஆ..!.. இங்க அடி… ஆ… அங்க அடி என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

Categories

Tech |