என்னை போன்ற பல்வேறு அம்மாவினுடைய விசுவாசிகளை இந்த எடப்பாடி பழனிச்சாமியார் வீழ்த்தி, எருவாக்கி உரமாக்கி, ஆக்டோபஸாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். மருது அழகுராஜ் அம்மாவின் குரலாக இருந்தார், பூங்குன்றன் அவர்கள் அம்மாவினுடைய மனசாட்சியாக இருந்தார். அப்படிப்பட்ட இருவருமே இன்று எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு ஒரு காற்புணர்ச்சி கொண்ட அராஜகத்தின் உச்சமான ஒருவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. அப்படிப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி 97 சதவீதம் நிர்வாகிகள் தன்னுடன் இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சேலத்தில் இருந்து சென்று பாருங்கள்… கிட்டத்தட்ட 99 சதவீத தொண்டர்கள் இன்று ஐயா ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள் என்பது நீங்கள் விசாரித்தாலே தெரியும் என தெரிவித்தார்.