செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, வைகோ பற்றிய ஆவணப்படத்தை பொறுத்தவரைக்கும் யாரையும் புண்படுத்தக் கூடாது. இந்த ஆவண படம் தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.அதிமுக – பாஜகவுக்கு நாங்கள் அழைப்பிதழ் கொடுக்கவில்லை, அதே நேரத்தில் அதிமுக தோழர்களை பொறுத்த வரைக்கும் தாராளமாக பார்க்கலாம். அதிமுகவில் தலைவர் வைகோ மதிக்கின்ற தலைவர்கள் இருக்கிறார்கள்.
தொண்டர்கள் இருக்கிறார்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். தான் தயவு செய்து இதில் அரசியல் வேண்டாம்.இந்த ஆவணப்படத்தில் வைகோவின் சாதனைகள் தியாகங்கள் தான் இருக்கும். யாரும் சமரசத்திற்கு வாய்ப்பு இல்லை. அவரின் தியாகங்களை சொல்லும் போது இதில் அரசியல் கொண்டுவராமல் இருக்க வேண்டும்.
அதிமுகவிலும் தலைவர் வைகோவை போற்றுகின்றவர்கள், வைகோ மீது நல்ல அன்பு வைத்திருக்கின்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதிமுகவை மட்டும் சொல்லவில்லை. எல்லோரும் ( பாஜக) பார்க்க வேண்டிய படம் என்றுதான் சொல்கிறேன். இது தலைவர் வைகோ தியாகங்கள் பற்றிய ஆவணப்படம். இதற்கான அழைப்பிதழ் அதிமுக – பாஜகவை தவிர மற்றவர்களுக்கு கொடுத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.