விபத்துப் பகுதி என்ற பலகை வைக்கப்பட்டுள்ளதையும் மறைத்து சாலையில் அதிமுக பேனர் வைக்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் சமயத்தில் பேனர்கள் வைப்பது வழக்கம். ஆனால் இந்த பேனர்கள் மூலம் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டதால் பேனர் வைக்க தடை விதிக்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பேனர் வைக்க தடை செய்யப்பட்ட நிலையிலும் திருப்பூரில் போக்குவரத்து சிக்னலை மறித்து சாலையில் பெரிய அளவில் அதிமுக பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதிலும் “விபத்துப் பகுதி” என்ற பலகை வைக்கப்பட்டுள்ளதையும் மறைத்து அதிமுக பேனர் வைக்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பேனர் விழுந்து எத்தனை பேர் உயிரிழந்தாலும் அரசுக்கு கவலையில்லை. உயிர் முக்கியமில்லை. பேனர் தான் முக்கியம் என்கிறதா? அரசு என்ற கேள்வி எழும்பியுள்ளது.