Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்…. 3ஆம் முறை வெற்றிக்கனி பறிப்போம்… ஓபிஎஸ் அதிரடி பேச்சு …!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் பேசிய துணை முதல்வர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம்” என பேசினார்.

Categories

Tech |