Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 14,683 வாக்குகள் முன்னிலை….!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 14,683 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார்.

மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதற்காக வேலூரில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஆகஸ்ட் 5_ஆம் தேதி  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்குள்ள மொத்த 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீதம் வாக்குகள் ஆகும். மேலும் பதிவான வாக்குபதிவு  இயந்திரங்களும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Image result for acshanmugam kathiranath deepalakshmi

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட துவக்கத்தில் இருந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். அதிலும் குறிப்பாக ஆம்பூர், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ஏ.சி.சண்முகத்திற்கு அதிக வாக்குகள் பெற்றார். அதே போல  அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.

Image result for acshanmugam kathiranath deepalakshmi

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,32,015 வாக்குகளும்,  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,17,332 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 6590 வாக்குகளும் பெற்றுள்ளனர்.  இதன்மூலம் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14,683 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

Categories

Tech |