Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர் தீடிர் மாற்றம்….. OPS ,EPS கூட்டறிக்கை….!!

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Image result for பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த முருகன்

இவர் வெளியூர்காரர் மற்றும் அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து இன்று அதிமுக_வின் தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த முருகன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மயில்வேல் போட்டியிடுவார் என்று அதிமுக_வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |