Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி”… அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!!

2 இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.  

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.  கடந்த 21ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது.

Seithi Solai

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி  தினம் என்பதால்,  விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்  வேட்பு மனுதாக்கல் செய்தார். அத்தொகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் முத்தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அதேபோல  நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

 

Categories

Tech |