Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : “அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை”… முதல்வர் ஈபிஎஸ் .!!

அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை, பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுகிறது . இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நேற்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் இன்று (23-ஆம் தேதி) மாலை 3 மணிவரை விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்காக  90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

Image result for ஓபிஎஸ் இபிஎஸ்

இதையடுத்து இன்று  மாலை 3: 30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வேட்பாளர்கள்  நேர்காணல் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு நேர்காணல் நடத்தியது. நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 90 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |