ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்ததை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அவர்கள் அமர்வில் காலை 10:45 மணி அளவில் தொடங்கியது. முதலில் இபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார்.
அதில், தனி நீதிபதியின் உத்தரவில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பான நிலை தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும், மனுவில் இல்லாத போது அந்த நிலை தொடர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் இதனால் கட்சி செயல்பட முடியாத நிலை இருக்கிறது. அதிமுக பிரதான கட்சியாக இருந்தாலும் செயல்பட முடியாத நிலை இருக்கிறது என்ற ஒரு வாதமானது முன்வைக்கப்பட்டது.
பொதுக்குழு அழைப்பு விடுத்தது சம்பந்தமான வாதங்களை எல்லாம் அவர் முன் வைத்தார் . பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தான் விதிகள் இருக்கிறதே தவிர பதினைந்து நாட்களுக்குள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி என்பது அதிமுகவில் கிடையாது.எனவே 15 நாட்கள் முன்பாகவே நோட்டீஸ் கொடுக்காததால் அந்த பொதுக்குழு செல்லாது என்ற வாதம் ஏற்க முடியாது என வாதிட்டார்.
பின்னர் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தனது வாதத்தை முன்வைத்தார். அவர் தனி நீதிபதி தங்களது வாதங்களை ஏற்றுக்கொண்டு தான் இந்த உத்தரவை எல்லாம் பிறப்பித்திருக்கிறார், தனி நீதிபதியின் உத்தரவையில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். அணைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பின்னர் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.