Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ் ? இன்று வெளியாகும் அறிவிப்பு …!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளார் யார் ? என்று இன்று அறிவிக்கப்பட இருக்கின்றது. 

தமிழக்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாகவே இருந்து வருகிறது. முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய அதிமுக உயர்மட்டக்குழு, செயற்குழு என பல்வேறு ஆலோசனை நடத்தினாலும் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சரிடம் மாறி மாறி அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கும் முடிவு கிடைக்காமல் இருந்த அதிமுக முதல்வர் வேட்பாளர் போட்டி இருந்து வந்த நிலையில் நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

நேற்று காலை முதல் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் இரவு பத்து முப்பது மணி வரை நீடித்தது. பல்வேறு முடிவுகள் இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவின் அதிக அதிகாரம் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஓ பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட குழு அமைக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு முதல்வர் தரப்பு தயாராக இல்லை. இந்த நிலையில் நேற்று 10:30 மணிக்கு துணை முதல்வர் வீட்டிற்கு அமைச்சர்கள் மாறி மாறி சென்று சமாதான முயற்சி மேற்கொண்டு வந்தார்கள். இந்த நிலையில்தான் இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் எந்த மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரியவில்லை.

Categories

Tech |