ஓபிஎஸ் VS இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கோஷம் எழுப்பியது தொடர்பாக வைத்தியலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பு ஆதரவாளர்களும், அதிமுக தலைமை இரு பிரிவாக இருப்பதை உணர்த்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். செயற்குழு கூட்டம் முடிந்து திரும்பி சென்ற வைத்தியலிங்கத்திடம் இது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிக்கிறதா என்ற கேள்விக்கு எந்த குழப்பமும் இல்லை, சந்தோசமாக அறிவிப்பு வரும், நேரம் காலம் இருக்கின்றது.
15 தீர்மானங்கள், சில கருத்துக்கள் எல்லாம் சொன்னார்கள். 7ஆம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து சொல்வார்கள். 7ஆம் தேதிக்கு பிறகு கட்சியின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும். அதிமுகவில் இரு பிரிவுகளாக செயல்படவில்லை, ஒரே பிரிவுகளாக தான் செயல்படுகின்றோம். இது ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவரை பிடிக்கும் அதனால் கோஷம் போடுவார்கள்.