Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கய அதிமுக…. நடுங்கும் OPS, EPS…. பாயப்போகும் சட்ட நடவடிக்கை …!!

OPS, EPS மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். இன்றைக்கு அவரே அந்த விசாரணைக்கு தடையா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி. போயஸ் கார்டன் வீட்டிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டது செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு 10 மணிக்கு. இடைப்பட்ட 73 நாட்களில் அவர் எப்படி இருந்தாங்க என்று வெளியில் இருக்கக்கூடிய நம்மை யாருக்காவது தெரிந்ததா.

Jayalalitha Dead Reasons Revealed by Apollo Hospitals Denied News

விசாரணை கமிஷன்:

வாய்ப்பு இருந்திச்சா? ஏதாவது ஒரு செய்தி வந்ததா? தனக்கே தெரியாது என்று பன்னீர்செல்வம் சொன்னாரு.சசிகலா குடும்பத்திற்கும் அமைச்சர் விஜயபாஸ்கற்கு மட்டும்தான் தெரியும் என்று சொன்னார். சமாதிக்கு போனார் தியானம் செய்தார். முகத்தை துடைத்துக் கொண்டார். இது எல்லாமே உங்களுக்கும் தெரியும். திடீர்னு அதிமுகலையே மீண்டும் பன்னீர்செல்வம் இணைந்து விட்டார். ஏன் இணைந்தார் என்று கேட்டப்போ ஜெயலலிதா மரணத்தில் இருக்கிற மர்மத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்து கொள்வதற்கு ஒத்துக்கொண்டார்கள் என்று ஒரு பதில் சொன்னார்.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆதாரங்கள் விசாரணை ஆணையத்தில் தாக்கல்!!

ரெண்டுபேருக்கும் பங்கு இருக்கு:

25 9 2017 ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அந்த ஆணையின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் அப்படி என்று சொல்லி தான் அதை நியமித்தார்கள். ஆனா இப்போ மூணு வருஷம் ஆகி இருக்கு. பலமுறை அதை நீடித்தும் கொடுத்திருக்கிறார்கள். இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. விஜய பாஸ்கரும் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர் தான் காரணம் என்று சொல்கிறார் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வம் தான் காரணம் என்று சொல்கிறார் விஜயபாஸ்கர். இவர்கள் சொல்வதெல்லாம் பார்த்தா இவர்கள் ரெண்டு பேருக்குமே ஏதோ பங்கு இருக்கிறது என்று தெரிகிறது.

நன்றி உணர்வு கிடையாது:

இவர்கள் 2 பேரும் நேர்மையானவர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக இருக்க வேண்டுமா இல்லையா. எடப்பாடி பழனிசாமிகோ  பன்னீர் செல்வத்திற்கோ ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருக்கும் என்று சொன்னாள் ஜெயலலிதா மரணத்தில் இருக்கக்கூடிய மர்மத்தை உடைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்.  ஜெயலலிதா இல்லையென்றால் பழனிச்சாமியும் கிடையாது பன்னீர்செல்வம் கிடையாது. இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. ஏன் இவ்வளவு பணம் சம்பாதித்து இருக்கவும் முடியாது.அந்த நன்றி உணர்வு அவர்களுக்குச் சிறிதும் கிடையாது.

Truce in AIADMK for now; OPS-EPS to jointly head party | Deccan Herald

ஆளுக்கொரு திசைக்கு போயிருவாங்க:

தாங்கள் பதவிக்கு வருவதற்கு காரணம் ஆக இருந்த, தாங்கள் பணம் சம்பாதிக்க காரணமாக இருந்த ஜெயலலிதாவிற்கு நன்றி இல்லாதவர்களாக இருந்த பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் கிடையாது. ஆறு மாத காலம் இந்த கொள்ளையை  தொடர்ந்து அடிக்கத்தான் பழனிசாமி பன்னீர்செல்வம் இப்போ ஒன்னா சேர்ந்து இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க. பதவி போனதும் பாருங்க இருவருமே ஆளுக்கு ஒரு திசையில் போயிடுவாங்க.

நடவடிக்கை:

அவர்கள் எந்த திசைக்கு போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும், ஜெயலலிதா மரணத்தில் இருக்கக்கூடிய மர்மமான பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும். கொள்ளை விவகாரம், கொடநாடு கொலை விவகாரம் எதுவாக இருந்தாலும் சரி. லஞ்ச லாவண்ய வழக்குகள் எதுவாக இருந்தாலும் சரி. அவையெல்லாம் சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது நாட்டு மக்களுக்கு கொடுக்க கூடிய உறுதிமொழியாக இந்த தேனி முப்பெரு விழா  கூட்டத்தின் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |