ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக கொடி, பெயர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நேற்று பதிலளித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுத்து இருந்தார். என்னை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி கட்சியின் சட்டதிட்ட விதிகளை மீறி செயல்படுகிறார் என்றெல்லாம் பதிலடி கொடுத்திருந்தார்.
மேலும் என்னை இது போன்ற அவதூறு பரப்பினால் நான் வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். அதேபோல தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கின்றது. இந்தக் கூட்டத் தொடரில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோரின் இருக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் எட்டப்படிக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில்,
இன்று எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளருடன் ஆலோசனை நடத்துகின்றார். இதில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. பாஜக – அதிமுக விடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பாஜகவுடன் கூட்டணி தொடரலாமா ? அல்லது பாஜக கூட்டணி இருந்து வெளியேற விடலாமா ? போன்ற விவகாரங்கள் பேசப்படுகின்றது.