Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை: ஈபிஎஸ் அதிரடி

இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ், ஓபிஎஸ் நினைத்து, நினைத்து பேசுவார். அவருக்கு சாதகமா எது இருக்குதோ,  அதுக்கு தகுந்த மாதிரி, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, பேச்சை மாற்றிக் கொள்வார். பச்சோந்தி தெரியும் இல்லையா ? அடிக்கடி கலரும் மாறும். அதைவிட அதிகமா கலர் மாறுபவர் ஓபிஎஸ்.தர்ம யுத்தம் எதுக்காக பண்ணாரு ? அதனாலதான கட்சி பிரிஞ்சது.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இரத்தத்தை, வியர்வையாக சிந்தி கடைமடை பகுதி வரை வாக்காளர்களை சந்தித்து ஆட்சியை உருவாக்கினார்கள். அந்த ஆட்சி என் தலைமையில் இருந்து கொண்டபோது இவர் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தார்.சட்டமன்றத்திலே நம்பிக்கை கூறும் தீர்மானம் வருகின்ற போது எதிர்த்து வாக்களித்தவர் அண்ணன் ஓபிஎஸ்.  இவர் எப்படி அண்ணா திமுக ஆட்சிக்கு துணை நின்றார் ?

அதோட இவர் கட்சிக்கு விசுவாசம் கிடையாது. அம்மாவுக்கு விசுவாசம் அம்மாவுக்கு விசுவாசம் என சொல்றாரு. எங்க விசுவாசம் ? அம்மா முதல் முதலாக தன்னந்தனியாக 1989லே சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தார்கள்.அப்பொழுது அம்மா போடிநாயக்கனூர் தொகுதியிலே சட்டமன்ற வேட்பாளராக அண்ணா திமுக சார்பாக நின்றார்கள். அப்பொழுது ஜானகி அம்மா சார்பாக வெண்ணிறாடை நிர்மலா அவர்கள் வேட்பாளராக ஜானகி அம்மா அணியிலே நிறுத்தப்பட்டார்.

அப்பொழுது ஓபிஎஸ் யாருக்கு வேலை செய்தார் ?  வெண்ணிறாடை நிர்மலாவுக்கு தான் பணியாற்றினார். அதுவும் தலைமை ஏஜெண்டாக இருந்து பணியாற்றியதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. ஆக அப்படிபட்டவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசம் ? எப்படிப்பட்ட தொண்டர்கள் இருந்த கட்சிக்கு, இப்படிப்பட்ட தலைவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |