அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது.
அதிமுக பொதுக்குழு விதிப்படி தான் கூட்டப்பட்டதா? நிரந்தர அவைத் தலைவராக கட்சியின் விதிப்படி தமிழ் மகன் உசை நியமிக்கப்பட்டாரா ? அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன் ? என்று நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று கேட்டிருந்தார்.ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று இபிஎஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அதில், அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது; சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதம் செய்து வருகின்றார். பொதுக்குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது.பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23ஆம் தேதியே பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூலை 11தேதிக்கான பொதுக்குழு நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ஆம் தேதி தயாரிக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பில் தனி நீதிபதி முன்பு, இரு நீதிபதி அமர்விலும் தாக்கல் செய்தது வரைவு தீர்மானம் தான்; நிகழ்ச்சி நிரல் அல்ல என எடப்பாடி தரப்பு தங்களின் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.