அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காலை நீதிமன்ற பணி தொடங்கிய பிறகு, மேல் முறையீடு மனுதாக்கல் செய்தது ஈபிஎஸ். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இரண்டு அமர்வு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர மோகன அமர்வில் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண ஆஜராகி முறையீடு செய்கிறார்.
இந்த மனு தாக்கல் செய்வது, இன்று மதியம் 1:30 மணிக்குள் முடிந்தால் தான், அந்த வழக்கு அடுத்த விசாரணை நாள் திங்கட்கிழமை பட்டியலிடப்படும். அதன்படி இந்த மனுத்தாக்கல் நடைமுறை இன்று 3.30 மணிக்குள் முடிவடைந்தால் மட்டுமே திங்கட்கிழமை விசாரணைக்கு வரும்.
ஒருவேளை இருக்கும் மனுதாக்கல் நடைமுறை முடியாவிட்டால், அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் திங்கள் கிழமை தான் மனுதக்கல் செய்யமுடியும். அப்படி ஒருவேளை திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தால், செவ்வாய் அல்லது புதன் மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.