Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை…. டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை உடனடியாக விரைந்து நடத்த வேண்டும் எனவும், தாமதம் ஏற்படுவதால் கட்சி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

ஆனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்களை நீதிபதிகள் ஏற்க மறுத்ததோடு நிர்வாக காரணங்களுக்காக டிசம்பர் 6-ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தனர். நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவு நாளின் போது ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் அதிமுக கட்சியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |