அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்