சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை இருந்த சசிகலா தண்டனை முடிவடைந்து நேற்று விடுதலையானார். இதை அடுத்து இவர் அரசியலுக்கு வருகை தந்தால் பெரிய மாற்றங்கள் வருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவின் விடுதலை மாற்றங்களை ஏற்படுத்துமா? மேலும் சசிகலா அதிமுகவில் இணைவாரா என்று பல கேள்விகள் எழுப்பப் பட்டது. இதற்கு அதிமுகவில் சசிகலா இணைவதற்கு சாத்தியமில்லை என்று முதல்வர் திட்டவட்டமாகக் கூறினார்.
அதிமுகவில் பலர் சசிகலா வருகையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரது விடுதலை யொட்டி திருநெல்வேலியில் அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் சசிகலா வருக வருக என்ற போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் போஸ்டர் ஒட்டிய அதிமுக மாவட்ட நிர்வாகியை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணிய ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டது.