Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தகுதியே இல்ல..! MGR_ரே வேண்டாம்னு வந்தேன்… கெத்தாக பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன் ..!!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சில நாட்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக கூறி திமுகவில் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் அதிமுகவில் இணைய இருக்கின்றார் என்ற செய்திகள் பலவராக பரவினர், இந்த செய்தி பரவிய உடனே மறுப்பு தெரிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 40 ஆண்டுகளாக திமுக கட்சியில் உள்ளேன். நிச்சயமாக அதிமுக இணைய மாட்டேன் எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் இதுகுறித்து சொல்லும்போது, எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கின்ற காலத்திலேயே நான் அந்த கட்சியின் செயல்பாடு பிடிக்கவில்லை என்று திமுகவில் இணைந்தேன். இப்போ போயும் போயும் எடப்பாடி தலைமையில் இருக்கின்ற அதிமுக கட்சியிலா  போய் சேருவேன். நான் போய் சேர வேண்டும் என்றால் திராவிட கழகத்தை தவிர வேறு எந்த கட்சிக்கும் ( ( அதிமுக, பாஜக )  தகுதி கிடையாது என்று விளக்கம் அளித்தார்.

Categories

Tech |