அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் செய்தி தொடர்பாளர்களின் ஆலோசனை கூட்டமானது வரும் 27ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அதிமுகவின் தலைமை கழகம் ஆனது தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
27ஆம் தேதி காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், இந்த அறிவிப்பானது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு வெளியிடுவதாக தலைமை கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவில் 2 செயற்குழு மற்றும் ஒரு பொதுக்குழு கூடுவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள்ளாக ஒரு செயற்குழு கூட்டத்தினை நடத்துவதற்கான முடிவுகளை எடுப்பதற்கான ஆலோசனை கூட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.